2 வழக்கம் தேர்வு 1

1. கீழ்க்காணும் வாக்கியங்களில் கோடிட்ட சொல்லின் பொருளை உணர்த்தும் மிகப் பொருத்தமான சொல்லைத் தேர்ந்தெடுத்து அதன் எண்ணை அடைப்பினுள் எழுதுக. ( 5 மதிப்பெண்கள்)

1. மருண்டு ஓடிய மானைப் புலி விரட்டிக் கொன்றது.
1. உருண்டு 3. அரண்டு
2. திரண்டு 4. விருட்டென்று ( )
2. அதிக வருமானம் தரும் பணியைத் தான் எல்லோரும் தேடுகிறார்கள்
1. சலுகைகள் 3. பணம்
2. வெகுமானம் 4. சம்பளம் ( )
3. உடற் சூட்டைத் தணிக்க அதிக நீரைப் பருக வேண்டும்.
1. துரத்த 3. குறைக்க
2. மறைக்க 4. அதிகரிக்க ( )
4. பதின்ம வயதினரின் சாதனைகள் எங்களைப் பிரமிக்க வைத்தன.
1. அதிர 3. மலைக்க
2. மயங்க 4. கலங்க ( )
5. படித்துக் கொண்டே வேலை செய்யும் மாணவர்களின் எண்ணிக்கை மிகுந்து வருகிறது.
1. அரிதாகி 3. அபூர்வமாக
2. அதிகரித்து 4. அதிகாரபூர்வமாகி ( )