18 07 06

தமிழ்ப் புத்தாண்டு ஒவ்வோர் ஆண்டும் சித்திரை மாதம் முதலாம் நாள் பிறக்கிறது. 28. ___________________ தான் தமிழ்ப் புத்தாண்டுப் பண்டிகையாகத் தமிழர்கள் கொண்டாடுகின்றனர். இது 29. ___________________ மாதமாகிய ஏப்பிரல் பதின்மூன்று அல்லது பதினான்காம் நாளன்று வரும். சிங்கப்பூரில் தமிழ்ப்புத்தாண்டு நாளன்று தமிழர்கள் தங்கள் வீட்டை நன்றாகக் கூட்டி மெழுகித் தூய்மை செய்வார்கள். குடும்ப உறுப்பினர்கள் குளித்து, 30. ___________________ அணிந்து, பின் ஆளுக்கொரு வேலையாகச் செய்வார்கள். பெண்கள் 31. ___________________ போட்டு வாசலை அழகுபடுத்துவார்கள். இனிப்பு, கசப்பு, துவர்ப்பு, கார்ப்பு, புளிப்பு, உவர்ப்பு என வழங்கும் அறுசுவைகளைக் கொண்ட உணவு வகைகளைச் சமைத்து கடவுளுக்குப் படைப்பர். பின்னர் குடும்பத்தினர் அனைவரும் 32. ___________________ தெய்வத்தை வழிபடுவார்கள். சாமிக்குப் படைக்கப்பட்ட 33. ___________________ உண்டு மகிழ்வார்கள். அன்று முழுவதும் மகிழ்ச்சிக்குக் குறைவே இருக்காது.
சித்திரை மாதத்தில்தான் தமிழகத்தில் இளவேனில் காலம் எனப்படும் வசந்தகாலம் தொடங்கும். மா, பலா, வாழை, போன்றவை செழித்துக் கொழிக்கும். எனவே பழவகைகள் 34. ___________________ கிடைக்கும். இனிய மலர்கள் பூத்துக் குலுங்கும் அதே நேரத்தில் வேப்ப மரத்திலும் பூக்கள் பூத்துக் குலுங்கும். தமிழ்ப்புத்தாண்டுச் சமையலில் வேப்பம்பூப் பச்சடியும், மாங்காய்ப் பச்சடியும் கட்டாயம் 35. ___________________ பெற்றிருக்கும். வேப்பம்பூ கசக்கும் என்றாலும், இரத்தத்தைத் தூய்மை செய்யும் 36. ___________________ அது பெற்றிருப்பதால் அதற்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. புத்தாண்டு நாளன்று நிகழ்பவையே அந்த ஆண்டு முழுவதும் நிகழும் என்பது தமிழ் மக்களின் நம்பிக்கை. அதனால்தான் அந்த ஆண்டு முழுவதும் 37. ___________________ இருப்பதற்காக புத்தாண்டை முறையாகவும் மகிழ்ச்சியாகவும் கொண்டாடி மகிழ்கிறார்கள்.


உதவிச் சொற்கள்.


1. தமிழ் 6. மகிழ்ச்சியாக 11. கொடுக்க
2. எளிதாக 7. கோலம் 12. படையலை
3. ஒன்றுகூடி 8. புத்தாடை 13. மலிவாக
4. பட்டாடை 9. செல்வ வளத்துடன் 14. ஆங்கில
5. ஆற்றலை 10. அந்நாளை 15. இடம்