விடுமுறை வீட்டுப்பாடம்

தாள் 1

2 விரைவு

“அ” பிரிவு (கடிதம்)

1. பின்வரும் இரண்டு தலைப்புகளில் ஏதேனும் ஒன்றுக்கு 120
சொற்களுக்குக் குறையாமல் கடிதம் ஒன்று எழுதுக
(20 மதிப்பெண்கள்)


(கடிதத்தில் உமது பெயரையும் முகவரியையும் குறிப்பிடாமல், ‘இராதா’ என்னும் புனைபெயரையும், புளோக் 607, அங் மோ கியோ அவென்யு 4, #02-1281, சிங்கப்பூர் 560607 என்னும் முகவரியையும் குறிப்பிடுக.)


1. உன் பள்ளியின் பரிசளிப்புத் தினம் எவ்வாறு கொண்டாடப்பட்டது என்பதை விளக்கி உன் தோழன்/தோழிக்கு ஒரு கடிதம் எழுதுக.

2. புகை பிடித்த குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட்ட உன் தோழன்/தோழிக்கு அறிவுரை கூறி ஒரு கடிதம் எழுதுக.


“ஆ” பிரிவு (கட்டுரை)


2. கீழே கொடுக்கப்பட்டிருக்கும் தலைப்புகளுள் ஏதேனும் ஒன்றைப்பற்றி 260 சொற்களுக்குக் குறையாமல் ஒரு கட்டுரை எழுதுக. (50 மதிப்பெண்கள்)

4. தமிழ் முரசு பத்திரிகையில் வெளிவந்த உன்னைப் பாதித்த ஒரு செய்தி.

5. நீ செய்யாத குற்றத்திற்காக தண்டிக்கப்பட்ட ஒரு சம்பவம்.


6. குற்றம் புரியும் இளைஞர்களின் எண்ணிக்கை பெருகி வருவதற்கான காரணங்கள் என்னவென்று நீ நினைக்கிறாய் என்பதை விவரித்து எழுதுக.
முற்றும்

UNICODE TRAINING FOR 2 NOR STUDENTS

கற்றலில் ஆர்வமா? அல்லது ஆழ்ந்த கற்றலா?

இணையத்துக்குப் போனாலே இன்பம்தான்.

தோழிக்கு உதவுவதில் இருக்கும் மகிழ்ச்சிக்கு அளவில்லைதான்.

18 07 06

தமிழ்ப் புத்தாண்டு ஒவ்வோர் ஆண்டும் சித்திரை மாதம் முதலாம் நாள் பிறக்கிறது. 28. ___________________ தான் தமிழ்ப் புத்தாண்டுப் பண்டிகையாகத் தமிழர்கள் கொண்டாடுகின்றனர். இது 29. ___________________ மாதமாகிய ஏப்பிரல் பதின்மூன்று அல்லது பதினான்காம் நாளன்று வரும். சிங்கப்பூரில் தமிழ்ப்புத்தாண்டு நாளன்று தமிழர்கள் தங்கள் வீட்டை நன்றாகக் கூட்டி மெழுகித் தூய்மை செய்வார்கள். குடும்ப உறுப்பினர்கள் குளித்து, 30. ___________________ அணிந்து, பின் ஆளுக்கொரு வேலையாகச் செய்வார்கள். பெண்கள் 31. ___________________ போட்டு வாசலை அழகுபடுத்துவார்கள். இனிப்பு, கசப்பு, துவர்ப்பு, கார்ப்பு, புளிப்பு, உவர்ப்பு என வழங்கும் அறுசுவைகளைக் கொண்ட உணவு வகைகளைச் சமைத்து கடவுளுக்குப் படைப்பர். பின்னர் குடும்பத்தினர் அனைவரும் 32. ___________________ தெய்வத்தை வழிபடுவார்கள். சாமிக்குப் படைக்கப்பட்ட 33. ___________________ உண்டு மகிழ்வார்கள். அன்று முழுவதும் மகிழ்ச்சிக்குக் குறைவே இருக்காது.
சித்திரை மாதத்தில்தான் தமிழகத்தில் இளவேனில் காலம் எனப்படும் வசந்தகாலம் தொடங்கும். மா, பலா, வாழை, போன்றவை செழித்துக் கொழிக்கும். எனவே பழவகைகள் 34. ___________________ கிடைக்கும். இனிய மலர்கள் பூத்துக் குலுங்கும் அதே நேரத்தில் வேப்ப மரத்திலும் பூக்கள் பூத்துக் குலுங்கும். தமிழ்ப்புத்தாண்டுச் சமையலில் வேப்பம்பூப் பச்சடியும், மாங்காய்ப் பச்சடியும் கட்டாயம் 35. ___________________ பெற்றிருக்கும். வேப்பம்பூ கசக்கும் என்றாலும், இரத்தத்தைத் தூய்மை செய்யும் 36. ___________________ அது பெற்றிருப்பதால் அதற்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. புத்தாண்டு நாளன்று நிகழ்பவையே அந்த ஆண்டு முழுவதும் நிகழும் என்பது தமிழ் மக்களின் நம்பிக்கை. அதனால்தான் அந்த ஆண்டு முழுவதும் 37. ___________________ இருப்பதற்காக புத்தாண்டை முறையாகவும் மகிழ்ச்சியாகவும் கொண்டாடி மகிழ்கிறார்கள்.


உதவிச் சொற்கள்.


1. தமிழ் 6. மகிழ்ச்சியாக 11. கொடுக்க
2. எளிதாக 7. கோலம் 12. படையலை
3. ஒன்றுகூடி 8. புத்தாடை 13. மலிவாக
4. பட்டாடை 9. செல்வ வளத்துடன் 14. ஆங்கில
5. ஆற்றலை 10. அந்நாளை 15. இடம்

2 வழக்கம் தேர்வு 1

1. கீழ்க்காணும் வாக்கியங்களில் கோடிட்ட சொல்லின் பொருளை உணர்த்தும் மிகப் பொருத்தமான சொல்லைத் தேர்ந்தெடுத்து அதன் எண்ணை அடைப்பினுள் எழுதுக. ( 5 மதிப்பெண்கள்)

1. மருண்டு ஓடிய மானைப் புலி விரட்டிக் கொன்றது.
1. உருண்டு 3. அரண்டு
2. திரண்டு 4. விருட்டென்று ( )
2. அதிக வருமானம் தரும் பணியைத் தான் எல்லோரும் தேடுகிறார்கள்
1. சலுகைகள் 3. பணம்
2. வெகுமானம் 4. சம்பளம் ( )
3. உடற் சூட்டைத் தணிக்க அதிக நீரைப் பருக வேண்டும்.
1. துரத்த 3. குறைக்க
2. மறைக்க 4. அதிகரிக்க ( )
4. பதின்ம வயதினரின் சாதனைகள் எங்களைப் பிரமிக்க வைத்தன.
1. அதிர 3. மலைக்க
2. மயங்க 4. கலங்க ( )
5. படித்துக் கொண்டே வேலை செய்யும் மாணவர்களின் எண்ணிக்கை மிகுந்து வருகிறது.
1. அரிதாகி 3. அபூர்வமாக
2. அதிகரித்து 4. அதிகாரபூர்வமாகி ( )